சோடியம்...

Multi tool use
NaAlO2Na3AsO4NaBH4NaBH3(CN)NaBO2NaBiO3NaBrNaBrONaBrO3NaBF4NaCH3COONaC6H5CO2NaC6H4(OH)CO2NaC6H7O7NaCNNaClNaClONaClO2NaClO3NaClO4NaFNa2FeO4NaHNaHCO3NaH2PO4NaHSO3NaHSO4NaINaIO3NaIO4Na5IO6NaMnO4NaN3NaNH2NaNO2NaNO3NaOCNNaO2NaO3NaOHNaPO2H2NaReO4NaSCNNaSHNaTcO4NaVO3Na2CO3Na2C2O4Na2CrO4Na2Cr2O7Na2GeO3Na2MnO4Na3MnO4Na2MoO4Na2MoS4Na2N2O2Na2ONa2O2Na2O(UO3)2Na2PO3FNa2PdCl4Na2SNa2SO3Na2SO4Na2S2O3Na2S2O4Na2S2O5Na2S2O6Na2S2O7Na2S2O8Na2S4O6Na2SeNa2SeO3Na2SeO4Na2SiO3Na2Si2O5Na4SiO4Na2TeNa2TeO3Na2TeO4Na2PoNa2Ti3O7Na2U2O7NaWO4Na2Zn(OH)4Na3NNa3PNa3PO4Na3VO4Na4Fe(CN)6Na4P3O7Na5P3O10
சோடியம்கார உலோகங்கள்ஒடுக்கிகள்தனிமங்கள்உணவுப் பட்டியல் கனிமங்கள்
தனிமம்அணு எண்மண்ணெய்க்குள்கடலில்சோடியம் குளோரைடுசேர்மமாககனிமம்ஆக்சிஜன்சிலிகான்அலுமினியம்இரும்புகால்சியத்திற்குஇங்கிலாந்துஹம்பிரி டேவிநீர்கால்சியம் குளோரைடையும்இரும்புத்மின்னாற்பகுப்புமூலம்உருகுநிலைகலவை
சோடியம்
Jump to navigation
Jump to search
சோடியம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
11Na | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெள்ளி போன்ற வெள்ளை உலோகம்![]() ![]() சோடியத்தின் நிறமாலைக்கோடுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் |
சோடியம், Na, 11 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு |
/ˈsoʊdiəm/ SOH-dee-əm |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை |
கார உலோகம் |

நெடுங்குழு, கிடை வரிசை, குழு |
1, 3, s |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
22.98976928(2) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு |
[Ne] 3s1 2,8,1 ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு |
H. Davy (1807) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் |
H. Davy (1807) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை |
திண்மம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) |
0.968 g·cm−3 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் |
0.927 g·cm−3 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை |
370.87 K, 97.72 °C, 207.9 °F |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை |
1156 K, 883 °C, 1621 °F |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாறுநிலை |
(extrapolated) 2573 K, 35 MPa |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் |
2.60 கி.யூல்·மோல்−1 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் |
97.42 கி.யூல்·மோல்−1 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை |
28.230 யூல்.மோல்−1·K−1 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் |
+1, -1 (வலிமையான கார ஒக்சைட்டு) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை |
0.93 (பாலிங் அளவையில்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 495.8 kJ·mol−1 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 4562 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 6910.3 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் |
186 பிமீ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை |
166±9 pm |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை |
227 பிமீ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு |
body-centered cubic ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு |
paramagnetic |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் |
(20 °C) 47.7 nΩ·m |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் |
142 W·m−1·K−1 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு |
(25 °C) 71 µm·m−1·K−1 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) |
(20 °C) 3200 மீ.செ−1 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை |
10 GPa |

நழுவு தகைமை |
3.3 GPa |

பரும தகைமை |
6.3 GPa |

மோவின் கெட்டிமை (Mohs hardness) |
0.5 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை |
0.69 MPa |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் |
7440-23-5 |

மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: சோடியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சோடியம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்குத் தேவையான ஒரு முக்கியக் கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது.[2] நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியமாகும். இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாகப் பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுக்களிலும் கூடச் சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது.
பொருளடக்கம்
1 கண்டுபிடிப்பு
2 பண்புகள்
3 பயன்கள்
4 சோடியம் கூட்டுப் பொருட்களின் பயன்கள்
4.1 சோடியம் பெராக்சைடு
4.2 சோடியம் ஹைட்ராக்சைடு
4.3 சோடியம் சயனைடு
4.4 சோடியம் குளோரைடு
4.5 பிற
4.6 அணு இயற்பியல் துறையில்
5 உயிரியல் பயன்
6 மேற்கோள்களும் குறிப்புகளும்
7 புற இணைப்புகள்
கண்டுபிடிப்பு
1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். தெவிட்டிய கரைசலில் நீர், உப்பின் சிதைவைத் தடை செய்கிறது என்பதால் மூலப் பொருள் இருந்தும் அதைப் பகுக்க முடிவதில்லை. இதனால் டேவி முதலில் நீர் மூலக்கூறு சோடாவை உருக்கிச் சோடியம் ஹைட்ராக்சைடைப் பெற்று, அதிலிருந்து மின்னாற் பகுப்புமூலம் சோடியத்தைப் பிரித்தெடுத்தார்.[3][4] சோடியம் குளோரைடை எளிதில் உருக்குவதற்கு அதனுடன் 50 விழுக்காடு கால்சியம் குளோரைடையும் சேர்த்து, செங்கல் வரியிட்ட இரும்புத் தொட்டியில் மின்னாற்பகுப்புமூலம் சோடியத்தைப் பெறமுடியும். சோடியம் குளோரைடின் உருகுநிலை 1077 K (804 °C),கால்சியம் குளோரைடைச் சேர்ப்பதால் கலவை 853 K (580 °C) வெப்ப நிலையிலேயே உருகி விடுகிறது.
பண்புகள்
இலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது.[5] இதன் வேதிக் குறியீடு Na ஆகும். சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும், மெழுகு போன்ற தோற்றமும், வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது.[6] சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி செ. வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது.

சுவாலைச் சோதனையில் சோடியம் பிரகாசமான மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்தும்.
சோடியம், நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை. இதற்கு உலர் உப்புத் தூள், உலர் சோடா, உலர் கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது[7] என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள். சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும். இதன் வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாகப் பயன்படுத்த ஏற்புடையதாயிருக்கிறது.[8] இதன் அணு எண் 11, அணு நிறை 22.99, அடர்த்தி 970 கிகி /கமீ. உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K (98 °C), 1156 K (883 °C) ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன் 1 ஆக உள்ளது.
பயன்கள்
கரிம வினைகளில் சோடியம் செரிவித்தலுக்கும், தொகுப்பாக்கத்திற்கும் ஆக்சிஜனிறக்கத்திற்கும் பயன் படுகிறது. பெட்ரோல் என்ஜின்களில் இயக்கத் திறனைச் செம்மைப்படுத்த உதவும் டெட்ரா ஈதைல் ஈயம் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் வழி முறையில் சோடியம் பெரும் பங்கேற்றுள்ளது.[9] சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும். சோடிய ஒளி ஒற்றை நிறங்கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி, காற்றின் ஈரத்தாலும், மூடுபனியாலும் குறைவாகவே உள்ளுறிஞ்சப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது. இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனிமழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.[10] சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில் ஒருபடித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. சோடியம் ஒளி மின் விளைவினால் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது. சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால், இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன்படுகிறது. சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை ஆக்சிஜனிறக்க ஊக்கியாகப் பயன்படுகிறது. இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு டைட்டானியம், ஸிர்கோனியம் போன்றவற்றை அவற்றின் டெட்ரா குளோரைடுகளிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது.
சோடியம் கூட்டுப் பொருட்களின் பயன்கள்

The structure of the complex of sodium (Na+, shown in yellow) and the antibiotic monensin-A.
சோடியத்தின் பல கூட்டுப்பொருள்கள் பலவிதங்களில் பயன்படுகின்றன.[11]
சோடியம் பெராக்சைடு
மஞ்சள் நிறங்கொண்ட சோடியம் பெராக்சைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்ற ஊக்கியாகும். ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்த இதன் கரைசல் துணிகளுக்கு வெளுப்பூட்டும் முறையில் பயன்படுத்தப் படுகிறது.[9] கார்பன்டைஆக்சைடை உட்கவர்ந்து ஆக்சிஜனை விடுவிக்கிறது என்பதால் நீர் மூழ்கிக்கப்பல் மற்றும் அடைத்த ஆய்வறைகளில் உள்ள காற்றை தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சோடியம் ஹைட்ராக்சைடு
சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு,[11] காகிதம், ஒளிப்படச் சுருள், ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது. இதன் அடர் கரைசல் தோலை அரித்தெடுத்துவிடும். பாசம் பிடித்த தரை, கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள்.
சோடியம் சயனைடு
சோடியம் சயனைடு மிகவும் நஞ்சானது. இது தங்கம்,வெள்ளியைப் பிரித்தெடுக்கும் வழி முறையிலும், மின் முலாம் பூச்சுத் தொழிலிலும் பயன்படுகிறது.
சோடியம் குளோரைடு
சமையலில் பயன்படுத்தும் உப்பு என்பது சோடியம் குளோரைடு ஆகும். உப்பினால் நமக்குக் கிடைக்கும் சோடியம் நம் உடலில் உள்ள நீர்மங்களில் ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக உள்ளது.[12] இதுவே நம் உடலில் இருக்கும் நீரின் மொத்த அளவைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது.[13][14] பொட்டசியத்துடன் இணைந்து உடலில் உள்ள நீர்மங்களின் சமனிலையைக் கட்டுப்படுத்துகிறது.[15] அதனால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கக் உதவுகிறது.[16][17] உபரியாகச் சோடியம் உடலில் சேரும் போது சிறு நீர்ப் போக்குத் தடைப்பட்டு உடலில் நீர் அதிகமாகிறது. கால்சியத்தின் வெளியேற்றத்தை வலிமையாகத் தூண்டி விடுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழக்கின்றன. இதயமும், சிறு நீரகமும் பாதிக்கப்படுகின்றன.[18][19]
பிற
சோடியம் அசைடு, சோடியம் குளோரேட், சோடியம் நைட்ரேட் போன்றவை வெடி பொருட்களின் தயாரிப்பிலும், சோடியம் பாஸ்பேட் உர உற்பத்தியிலும், காகிதங்களுக்கு வெளுப்பூட்டுவதிலும், சோடியம் பென்சோயேட் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதிலும் பயன்படுகின்றன.
சோடியம் புளூரைடு பூச்சி கொல்லி மருந்தாகவும்,சோடியம் சிலிகேட் தீப்பற்றிக் கொள்ளாத ஆடை உற்பத்தியிலும், சோடியம் தயோ சல்பேட் ஒளிப் படப்பதிவு முறையிலும், சோடியம் பை கார்பனேட் தீயணைப்புக் கருவியிலும், அமில நீக்கி மருந்தாகவும் பயன்தருகின்றன.[20][21]
அணு இயற்பியல் துறையில்
அகச் சிவப்புக் கதிர்களைச் சிதறலுக்கு உட்படுத்தி ஆராய சோடியம் குளோரைடு படிகம் பயன் படுகிறது. கதிர் வீச்சுகளுக்கு உடனொளிர்வு (Floroscence ) தரக்கூடிய பொருளாகத் தாலியம் சேர்ந்த சோடியம் அயோடைடு படிகம் அணுக்கதிர் ஆய்வுக் கருவிகளில் பயன் தருகிறது . அணு உலைகளில் சோடியம் ஒரு வெப்பப் பரிமாற்று ஊடகமாகக் கொள்ளப்பட்டுள்ளது. நீர், கன நீருக்கு அடுத்தபடியாக ஏற்புமிக்க குளிர்விப்பானாக இருப்பது உருகிய சோடியம்.[8] இதிலுள்ள முக்கியக் குறைபாடு, சோடியம், காற்று மற்றும் நீரோடு எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சோடியம்-24 என்ற அணு எண்மம் தடங்காட்டியாகப்(tracer) பயன்படுகிறது. இதனால் உடலில் உள்ள உறுப்புகளின் பாதிப்பை அறிய முடிகிறது. சோடியம்-24 ன் அரை வாழ்வு 15 மணிகள் மட்டுமே.[22] எனவே கதிரியக்கப் பொருள் உடலுக்குள் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன.[23]
உயிரியல் பயன்
மனிதர்களுக்கு சோடியம் ஓர் இன்றியமையாத கனிமமாகக் கருதப்படுகிறது. இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், இரத்தத்தின் சவ்வூடுபரவல் சமநிலை, இரத்தத்தின் pH ஆகியனவற்றை ஒழுங்குபடுத்தும் அத்தியாவசியமான கனிமம் சோடியமே ஆகும். மனிதனுக்கு சோடியத்தின் உடலியல் தேவை அளவு ஒரு நாளைக்கு 500 மில்லிகிராம் ஆகும் [24]. உணவில் மனிதன் எடுத்துக் கொள்ளும் சோடியம் குளோரைடு எனப்படும் உப்பே சோடியத்திற்கான ஆதார மூலமாகும். தவிர உணவை மெண்மையாக்கவும் பாதுகாக்கவும் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவிலிருந்தே சோடியம் கிடைக்கிறது. சில உணவுப் பொருள்களில் இயற்கையிலேயே சோடியம் கலந்திருருக்கிறது. அவற்றை உண்பதாலும் மனிதனுக்கு சோடியம் கிடைக்கிறது. மோனோசோடியம் குளூட்டாமேட்டு, சோடியம் நைட்ரைட்டு, சோடியம் சாக்கரின், சோடியம் பை கார்பனேட்டு, சோடியம் பென்சோயேட்டு போன்ற சேர்க்கைப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன [25]. இவற்ரிலிருந்தும்
சோடியம் மனிதனுக்குக் கிடைகிறது. அமெரிக்க மருந்து நிறுவனம் ஒரு நாளைக்கு 2.3 கிராம் அளவு வரைக்கும் நாம் சோடியத்தை எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கிறது. ஆனால் ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு 3.4 கிராம் சோடியத்தை எடுத்துக் கொள்வதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 2 கிராமுக்குக் குறைவான அளவு சோடியம் எடுத்துக் கொள்பவர்களுக்கு 2 முதல் 4 மில்லிமீட்டர் பாதரசம் அளவுக்கு சிசுடாலிக் இரத்த அழுத்தக் குறைவு உண்டாவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு குறைவான சோடியம் எடுத்துக் கொள்பவர்களில் 17 சதவிதத்தினர் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 7.6 மில்லியன் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. உப்பில் 39.3 சதவீதம் மட்டுமே சோடியம் உள்ளது. எஞ்சியிருப்பது குளோரினும் சுவடு அளவு தனிமங்களும் ஆகும். அதனால் 2.3 கிராம் சோடியம் என்பது 5.9 கிராம் உப்புக்கு சமம் அல்லது 2.7 மில்லி உப்புக் கரைசலுக்குச் சமம் என்பதை கணக்கீடு உணர்த்துகிறது. அதேவேளையில் அமெரிக்க இதய நிறுவனம் ஒரு நாளைக்கு 1.5 கிராம் சோடியமே போதுமானது என பரிந்துரைக்கிறது.
மனிதர்களில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள் எவராக இருந்தாலும் தங்கள் சிறுநீரில் ஒரு நாளைக்கு மூன்று கிராம் சோடியத்திற்கு குறைவாக வெளியேற்றுபவர்கள் மரணம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயத்தில் இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தங்கள் சிறுநீரில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிராம் சோடியத்தை வெளிய்ற்றுபவர்களுக்கு
இந்த அபாயம் அவர்களைவிடக் குறைவாகும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 7 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட சோடியத்தை தங்கள் சிறுநீரில் வெளியேற்றினால் அவர்கள் உயர் இறப்பு வீதமும் இருதய நோயுடன் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு இது உண்மையாக இருக்கவில்லை. உயர் இரத்த அழுத்தம் கொண்ட முதியவர்கள் மற்றும் அதற்கு அருகில் இருப்பவர்கள் தினசரி உட்கொள்ளும் சோடியத்தின் அளவை 1.5 கிராம் அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் கூறுகிறது.
நம் உடலிலுள்ள ரெனின்-ஆஞ்சியோடென்சின் எனப்படும் இயக்குநீர் அமைப்பு உடலில் திரவம் மற்றும் சோடியம் செறிவு அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் சிறுநீரகத்தில் சோடியம் செறிவைக் குறைப்பதும் ரெனின் உற்பத்தியை விளைவிக்கும், இது அல்டோசுடிரோன் மற்றும் ஆஞ்சியோடென்சினை உற்பத்தி செய்கிறது, சிறுநீரில் சோடியத்தை தக்கவைக்கிறது. சோடியத்தின் அடர்த்தி அதிகமானால் ரெனின் உற்பத்தி குறையும். சோடியத்தின் அடர்த்தி மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும். நியூரானின் செயல்பாட்டில் சோடியம் அயனி முக்கியமான மின்பகுபொருளாக செயல்படுகிறது. செல்களுக்கும் அணுபுற நீர்மத்துக்கும் இடையிலான சவ்வூடுபரவலை சோடியம் முறைப்படுத்துகிறது.
மனிதர்களில் வழக்கத்திற்கு மாறாகக் காணப்படும்
குறைந்த அல்லது உயர் சோடியம் அளவுகள் ஐப்போநேட்ரிமியா மற்றும் ஐப்பர்நேட்ரிமியா என மருத்துவம் அங்கீகரிக்கிறது. இந்த நிலை மரபணு காரணிகள், வயது அல்லது நீண்டகால வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படலாம்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
↑ Endt, P. M. (12/1990). "Energy levels of A = 21–44 nuclei (VII)". Nuclear Physics A 521: 1–400. doi:10.1016/0375-9474(90)90598-G. Bibcode: 1990NuPhA.521....1E.
↑ Lide, D. R., தொகுப்பாசிரியர் (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0486-5.
↑ Davy, Humphry (1808). "On some new phenomena of chemical changes produced by electricity, particularly the decomposition of the fixed alkalies, and the exhibition of the new substances which constitute their bases; and on the general nature of alkaline bodies". Philosophical Transactions of the Royal Society of London 98: 1–44. doi:10.1098/rstl.1808.0001. http://books.google.com/?id=gpwEAAAAYAAJ&pg=PA57.
↑ Weeks, Mary Elvira (1932). "The discovery of the elements. IX. Three alkali metals: Potassium, sodium, and lithium". Journal of Chemical Education 9 (6): 1035. doi:10.1021/ed009p1035. Bibcode: 1932JChEd...9.1035W.
↑ Newton, David E. (1999). Baker, Lawrence W.. ed. Chemical Elements. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7876-2847-5. இணையக் கணினி நூலக மையம்:39778687.
↑ Gatti, M.; Tokatly, I.; Rubio, A. (2010). "Sodium: A Charge-Transfer Insulator at High Pressures". Physical Review Letters 104 (21): 216–404. doi:10.1103/PhysRevLett.104.216404. Bibcode: 2010PhRvL.104u6404G.
↑ Tjrhonsen, Dietrick E. (1985-08-17). "Sodium found in Mercury's atmosphere". BNET. மூல முகவரியிலிருந்து 2012-07-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-09-18.
↑ 8.08.1 Sodium as a Fast Reactor Coolant presented by Thomas H. Fanning. Nuclear Engineering Division. U.S. Department of Energy. U.S. Nuclear Regulatory Commission. Topical Seminar Series on Sodium Fast Reactors. May 3, 2007
↑ 9.09.1 Alfred Klemm, Gabriele Hartmann, Ludwig Lange, "Sodium and Sodium Alloys" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a24_277
↑ Lindsey, Jack L. (1997). Applied illumination engineering. Fairmont Press. பக். 112–114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88173-212-2. இணையக் கணினி நூலக மையம்:22184876. http://books.google.com/books?id=0d7u9Nr33zIC&pg=PA112.
↑ 11.011.1 Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1985). "Natrium" (in German). Lehrbuch der Anorganischen Chemie (91–100 ). Walter de Gruyter. பக். 931–943. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-007511-3.
↑ Comprehensive Coordination Chemistry II. 2004. p. 515. doi:10.1016/B0-08-043748-6/01055-0. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-043748-4.
↑ "Sodium and Potassium Quick Health Facts". பார்த்த நாள் 7 November 2011.
↑ Dean, John Aurie; Lange, Norbert Adolph (1998). Lange's Handbook of Chemistry. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-016384-7.
↑ Barber, H. H.; Kolthoff, I. M. (1929). J. Am. Chem. Soc. 51 (11): 3233. doi:10.1021/ja01386a008.
↑ Kingsley, G. R.; Schaffert, R. R. (1954). "Micro-flame Photometric Determination of Sodium, Potassium and Calcium in Serum with Solvents". J. Biol. Chem. 206 (2): 807–15. பப்மெட்:13143043. http://www.jbc.org/content/206/2/807.
↑ McGuire, Michelle; Beerman, Kathy A. (2011). Nutritional Sciences: From Fundamentals to Food. Cengage Learning. பக். 546. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-324-59864-3. இணையக் கணினி நூலக மையம்:472704484.
↑ Geleijnse, J. M.; Kok, F. J.; Grobbee, D. E. (2004). "Impact of dietary and lifestyle factors on the prevalence of hypertension in Western populations". European Journal of Public Health 14 (3): 235–239. doi:10.1093/eurpub/14.3.235. பப்மெட்:15369026.
↑ Lawes, C. M.; Vander Hoorn, S.; Rodgers, A.; International Society of Hypertension (2008). "Global burden of blood-pressure-related disease, 2001". Lancet 371 (9623): 1513–1518. doi:10.1016/S0140-6736(08)60655-8. பப்மெட்:18456100. http://www.worldactiononsalt.com/evidence/docs/thelancet_hypertension_05.08.pdf.
↑ Wiberg, Egon; Wiberg, Nils; Holleman, A. F. (2001). Inorganic Chemistry. Academic Press. பக். 1103–1104. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-352651-9. இணையக் கணினி நூலக மையம்:48056955. http://books.google.com.sg/books?id=Mtth5g59dEIC&pg=PA1103.
↑ Remington, Joseph P. (2006). Beringer, Paul. ed. Remington: The Science and Practice of Pharmacy (21st ). Lippincott Williams & Wilkins. பக். 365–366. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-4673-1. இணையக் கணினி நூலக மையம்:60679584.
↑ Audi, Georges (2003). "The NUBASE Evaluation of Nuclear and Decay Properties". Nuclear Physics A (Atomic Mass Data Center) 729: 3–128. doi:10.1016/j.nuclphysa.2003.11.001. Bibcode: 2003NuPhA.729....3A.
↑ Sanders, F. W.; Auxier, J. A. (1962). "Neutron Activation of Sodium in Anthropomorphous Phantoms". HealthPhysics 8 (4): 371–379. doi:10.1097/00004032-196208000-00005. பப்மெட்:14496815.
↑ "Sodium". Northwestern University. மூல முகவரியிலிருந்து 2011-08-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-11-21.
↑ "Sodium in diet". MedlinePlus, US National Library of Medicine (5 October 2016).
புற இணைப்புகள்
Sodium at The Periodic Table of Videos (University of Nottingham)- Etymology of "natrium" – source of symbol Na
- The Wooden Periodic Table Table's Entry on Sodium
- Sodium isotopes data from The Berkeley Laboratory Isotopes Project's
தனிம அட்டவணை | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
11 |
12 |
13 |
14 |
15 |
16 |
17 |
18 |
||||||||||||||||
1 |
H |
He |
|||||||||||||||||||||||||||||||
2 |
Li |
Be |
B |
C |
N |
O |
F |
Ne |
|||||||||||||||||||||||||
3 |
Na |
Mg |
Al |
Si |
P |
S |
Cl |
Ar |
|||||||||||||||||||||||||
4 |
K |
Ca |
Sc |
Ti |
V |
Cr |
Mn |
Fe |
Co |
Ni |
Cu |
Zn |
Ga |
Ge |
As |
Se |
Br |
Kr |
|||||||||||||||
5 |
Rb |
Sr |
Y |
Zr |
Nb |
Mo |
Tc |
Ru |
Rh |
Pd |
Ag |
Cd |
In |
Sn |
Sb |
Te |
I |
Xe |
|||||||||||||||
6 |
Cs |
Ba |
La |
Ce |
Pr |
Nd |
Pm |
Sm |
Eu |
Gd |
Tb |
Dy |
Ho |
Er |
Tm |
Yb |
Lu |
Hf |
Ta |
W |
Re |
Os |
Ir |
Pt |
Au |
Hg |
Tl |
Pb |
Bi |
Po |
At |
Rn |
|
7 |
Fr |
Ra |
Ac |
Th |
Pa |
U |
Np |
Pu |
Am |
Cm |
Bk |
Cf |
Es |
Fm |
Md |
No |
Lr |
Rf |
Db |
Sg |
Bh |
Hs |
Mt |
Ds |
Rg |
Cn |
Nh |
Fl |
Mc |
Lv |
Ts |
Oc |
|
பகுப்புகள்:
- சோடியம்
- கார உலோகங்கள்
- ஒடுக்கிகள்
- தனிமங்கள்
- உணவுப் பட்டியல் கனிமங்கள்
(RLQ=window.RLQ||[]).push(function(){mw.config.set({"wgPageParseReport":{"limitreport":{"cputime":"1.032","walltime":"1.249","ppvisitednodes":{"value":39678,"limit":1000000},"ppgeneratednodes":{"value":0,"limit":1500000},"postexpandincludesize":{"value":458690,"limit":2097152},"templateargumentsize":{"value":116119,"limit":2097152},"expansiondepth":{"value":14,"limit":40},"expensivefunctioncount":{"value":2,"limit":500},"unstrip-depth":{"value":0,"limit":20},"unstrip-size":{"value":34633,"limit":5000000},"entityaccesscount":{"value":0,"limit":400},"timingprofile":["100.00% 822.223 1 -total"," 40.72% 334.824 1 வார்ப்புரு:தகவற்சட்டம்_சோடியம்"," 38.18% 313.884 1 வார்ப்புரு:Elementbox"," 27.65% 227.324 1 வார்ப்புரு:Reflist"," 26.99% 221.957 1 வார்ப்புரு:தனிம_வரிசை_அட்டவணை"," 22.01% 180.954 118 வார்ப்புரு:Element_cell"," 17.64% 145.025 19 வார்ப்புரு:Citation/core"," 15.97% 131.315 1 வார்ப்புரு:NavPeriodicTable"," 13.30% 109.357 118 வார்ப்புரு:NavPeriodicTable/Elementcell"," 12.93% 106.275 11 வார்ப்புரு:Cite_journal"]},"scribunto":{"limitreport-timeusage":{"value":"0.015","limit":"10.000"},"limitreport-memusage":{"value":893891,"limit":52428800}},"cachereport":{"origin":"mw1231","timestamp":"20190530102041","ttl":2592000,"transientcontent":false}}});});{"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b9au0bcbu0b9fu0bbfu0bafu0baeu0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q658","mainEntity":"http://www.wikidata.org/entity/Q658","author":{"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects"},"publisher":{"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":{"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png"}},"datePublished":"2007-04-16T18:43:54Z","dateModified":"2019-05-30T10:20:40Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/2/27/Na_%28Sodium%29.jpg","headline":"u0b85u0ba3u0bc1 u0b8eu0ba3u0bcd 11 u0b95u0bcau0ba3u0bcdu0b9f u0ba4u0ba9u0bbfu0baeu0baeu0bcd"}(RLQ=window.RLQ||[]).push(function(){mw.config.set({"wgBackendResponseTime":131,"wgHostname":"mw1250"});});XnDCZkhiNN2lJ7,96qmta0hqqdibXOoi9zs,Xy38uX15inbKYS 9